பக்தியின் பெயரால் மோசடியில் ஈடுபடும் கும்பல் - 300 கிலோ பவள பாறைகள் பறிமுதல்
ராமேஸ்வரத்திற்கு வரும் பக்தர்களிடம், ராமர் இலங்கைக்கு பாலம் அமைத்த கல் என்று கூறி பவளப்பாறைகளை சிலர் விற்பதாக புகார் எழுந்த வண்ணம் இருந்தன.
ராமேஸ்வரத்திற்கு வரும் பக்தர்களிடம், ராமர் இலங்கைக்கு பாலம் அமைத்த கல் என்று கூறி பவளப்பாறைகளை சிலர் விற்பதாக புகார் எழுந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்ட மத்திய வன உயிரியல் குற்றப் பிரிவு அதிகாரிகள், கடலில் போடப்பட்டிருந்த 300 கிலோ பவளப்பாறைகளை பறிமுதல் செய்தனர். மேலும் பவளப்பாறைகளை கடலில் எறிந்தவர்கள் குறித்தும், தாங்கள் வருவது குறித்து பவள பாறைகள் விற்றவர்களுக்கு தகவல் தெரிவித்தவர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
Next Story