சிஏஏ-வுக்கு எதிராக 11-வது நாளாக போராட்டம் : பெண்கள், குழந்தைகள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை வண்ணாரப்பேட்டையில் 11-வது நாளாக இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை வண்ணாரப்பேட்டையில் 11-வது நாளாக இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கண்ணன் ரவுண்டானா லாலா குண்டா பகுதியில் நடைபெறும் இந்த போராட்டத்தில், பெண்கள், குழந்தைகள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்புகள், வழக்கறிஞர்கள் என ஏராளமானோர் போராட்டக்களத்தில் பங்கேற்று வருகின்றனர்.
Next Story