சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏப்ரல் 1 முதல் பிளாட்பார்ம் டிக்கெட் உயர்வு
சென்னை புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமேடை கட்டணம் 10 ரூபாயிலிருந்து 15 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
சென்னை புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமேடை கட்டணம் 10 ரூபாயிலிருந்து 15 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. ஜூன் 30 ஆம் தேதி வரை இந்த கட்டண உயர்வு அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு பயணிகளுக்கு கூடுதல் சுமை என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். கூட்ட நெரிசலை தவிர்க்கவே கட்டண உயர்வு என்பதை ஏற்க இயலாது எனவும் கட்டண உயர்வுக்கு பதிலாக ரயில் நிலையத்தில் அனுமதி நேரத்தை குறைக்கலாம் என்று ரயில்வே ஊழியர்கள் சங்கம் கூறியுள்ளது.
Next Story