"குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறுமாறு தமிழக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறுமாறு தமிழக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து அதிமுக வாக்களித்தாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் தற்போது என்பிஆர் கணக்கெடுப்பில் 'தாய்மொழி, தந்தை, தாயார் பெயர், பிறந்த இடம், பிறந்த தேதி' ஆகியவற்றைத் தவிர்க்கக் கோரி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே "என்.பி.ஆரை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம்" என்று உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறுமாறு தமிழக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Next Story