"எளிய நடைமுறையில் வீடுகள் கட்ட ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்கப்படுகிறது" - ஒ. பன்னீர்செல்வம்

தனி வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான விதிமுறைகளை எளிமை செய்துள்ளதாக துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
x
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், வீடு மற்றும் வீட்டு மனைகள் தொடர்பான கண்காட்சியை அவர் தொடங்கி வைத்தார். பின்னர், மேடையில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர், நகர்புறத்தில் வீடுகள் வாங்கி பயன்பெறும் நோக்கத்துடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக கூறினார். அதை கட்டுமானத் துறையினர் வரவேற்றுள்ளதாக தெரிவித்த ஒ. பன்னீர்செல்வம், தமிழ்நாடு ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சி விதிகள் மற்றும் கட்டட விதிகள் 2019 ஐ, கடந்த பிப்ரவரி மாதம் முதல் அமல்படுத்தி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். குறுந்தகவல், ஆன்லைன் பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகளால், எளிமை செய்துள்ளதாக கூறிய துணை முதலமைச்சர், ஒற்றை சாளர முறையால் அதிக பயன்பெறலாம் என்றார்.  

Next Story

மேலும் செய்திகள்