எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப் படங்களை வைக்க எதிர்ப்பு- திமுகவினருடன் அதிமுகவினர் கடும் வாக்குவாதம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை வைக்கும் விவகாரத்தில், திமுக, அதிமுகவினரிடையே மோதல் உருவானதால் பரபரப்பு நிலவியது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப் படங்களை வைக்க எதிர்ப்பு- திமுகவினருடன் அதிமுகவினர் கடும் வாக்குவாதம்
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை வைக்கும் விவகாரத்தில், திமுக, அதிமுகவினரிடையே மோதல் உருவானதால் பரபரப்பு நிலவியது. மூனுகப்பட்டு ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவராக திமுகவினர் தேர்வாகினர். இந்நிலையில், அந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தில், மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படங்களை வைக்க அதிமுகவினர் முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர், ஊராட்சி அலுவலகத்தை பூட்டியுள்ளனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அதிமுகவினர், வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் நடத்திய சமாதானத்தை தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் வைக்கப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்