குரூப் 4 முறைகேடு விவகாரம் - ஜெயக்குமார், ஓம்காந்தனிடம் விசாரணை
மதுரை மேலூரில் விடைத்தாள்கள் அரசு வாகனத்தில் இருந்து எடுத்ததாக கூறப்படும் குறிப்பிட்ட இடத்தில் ஜெயக்குமார் மற்றும் ஓம்காந்தனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
மதுரை, மேலூரில் விடைத்தாள்கள் அரசு வாகனத்தில் இருந்து எடுத்ததாக கூறப்படும், குறிப்பிட்ட இடத்தில், ஜெயக்குமார் மற்றும் ஓம்காந்தனிடம், சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். மதுரை மாவட்டம் மேலூர் புறவழிச்சாலையிலுள்ள தனியார் ஹோட்டல் அருகில், விடைத்தாள்களை அரசு வாகனத்தில் இருந்து எடுத்ததாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர். இதன் அடிப்படையில் அந்த இடத்தில் விசாரணை நடைபெற்றது. மேலூர் கிராம நிர்வாக அலுவலர் தமோதரன் மற்றும் உதவியாளர் பதினெட்டான் முன்னிலையில், ஜெயக்குமார் மற்றும் ஓம்காந்தனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரனை நடத்தினர். தொடர்ந்து, ராமேஸ்வரத்தில் விசாரணை செய்ய, அவர்களை கொண்டு சென்றனர்.
Next Story