"சிஏஏ குறித்து தி.மு.க தவறான தகவல்" - தி.மு.க மீது முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தவறான செய்தி கூறி, அமைதியான தமிழகத்தில் குந்தகத்தை ஏற்படுத்த தி.மு.க முயற்சிப்பதாக முதலமைச்சர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
சிஏஏ குறித்து தி.மு.க தவறான தகவல் - தி.மு.க மீது முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
x
சிஏஏவுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற தி.மு.க உறுப்பினர் மனோதங்கராஜ் கேட்டுக்கொண்டார். பதிலளித்த முதலமைச்சர், சி.ஏஏ-வால் தமிழகத்தில் எந்த சிறுபான்மையினரும் பாதிக்கப்படவில்லை என்றார். இந்த விவகாரத்தில் தவறான செய்தி கூறி, அமைதியான தமிழகத்தில், குந்தகத்தை ஏற்படுத்த தி.மு.க முயற்சிப்பதாக அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இந்த சட்டத்தை திரும்ப பெறும் அதிகாரம் மத்திய அரசிடம் இருப்பதால், நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்கள் கொண்ட தி.மு.க, அங்கு இதை வலியுறுத்த வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்