சிவன் கோவில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 8 வீடுகள் அடுத்தடுத்து குளத்தில் மூழ்கியதால் பரபரப்பு
நாகையில் உள்ள சிவன் கோவில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 8 வீடுகள் அடுத்தடுத்து குளத்தில் திடீரென சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம் வெளிப்பாளையம் சிவன் கோயிலுக்கு சொந்தமான குளத்தை சுற்றி 50 -க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளன. சமீபத்தில் பெய்த மழை மற்றும் மேட்டூர் அணையில் இருந்து வந்த தண்ணீரின் காரணமாக கோவில் குளம் படிக்கட்டுகளை தாண்டி நிரம்பி வழிகிறது. இந்நிலையில் குளம் நீர் நிரம்பி வழிந்ததால், அதன் அருகே கட்டப்பட்டிருந்த அடுத்தடுத்து 8 வீடுகள் மளமளவென சரிந்தன. இதனையடுத்து, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நபர்கள், அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர், வீட்டில் இருந்த பொருட்களை எடுக்க முடியாமல் தவித்த அப்பகுதி மக்கள், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்த வந்த மீட்புப்படையினர், இடிபாடுகளை அப்புறப்படுத்தினர்.
Next Story