தூத்துக்குடியில் ரூ.20 கோடி மதிப்பில் புற்றுநோய் மண்டல மையம்- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜன், கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்றுநோய் மையம் அமைக்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜன், கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்றுநோய் மையம் அமைக்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கன்னியாகுமரியில், மையம் அமைக்கும் அளவிற்கு புற்று நோய் பாதிப்புகள் இல்லை என்றார். அதே சமயம், தூத்துக்குடியில் 20 கோடி ரூபாய் மதிப்பில் லீனியர் ஆக்சிலேட்டர் என்ற புற்றுநோய் மையம் அமைக்கப்பட்டு வருவதாக கூறினார். இந்த மருத்துவமனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கான புற்றுநோய் மண்டலமாக செயல்படும் என்றும், அதில் சிகிச்சை பெறலாம் என்று தெரிவித்தார்.
Next Story