மின்கம்பத்தில் தலைகீழாக ஏறி அசத்தும் இளைஞர் - கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற முயற்சி
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என லட்சியக்கனவுகளோடு, மின்கம்பத்தில் தலைகீழாக ஏறி அசத்துகிறார், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர்...
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள தண்டுகாரன் தெருவைச் சேர்ந்த அருண் தான், இது போன்ற வித்தியாசமான லட்சியக்கனவுகளோடு பயணிக்கும் இளைஞர். குடும்ப சூழல் காரணமாக பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அருண், கின்னஸ் புத்தகத்தில் தனது பெயர் இடம்பெற வேண்டும் என்ற ஒரே ஆசையை லட்சியமாகக் கொண்டு, அதற்காக பத்து ஆண்டுகளுக்கும் மேல், தனது கடின உழைப்பை அர்ப்பணித்துள்ளார். சிறு வயது முதலே மரங்களில் தலைகீழாக ஏறுவதற்காக கடின பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளார். சில வருட பயிற்சியின் பலனாக சுமார் 60 அடி உயரம் கொண்ட மின்கம்பத்தில், தலைகீழாக ஏறி, தனது கனவின் ஒரு பாதியை நிறைவேற்றியுள்ளார் அருண்.
குறிப்பிட்ட நேரத்தில் மின் கம்பத்தில் ஏறி விடுவேன் என்று கூறும் அருண், நிச்சயம் தனது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வைப்பேன் என்று நம்பிக்கையோடு கூறுகிறார்
தன்னம்பிக்கையோடு, இலக்கை நோக்கி பயணித்தால் வெற்றியடையலாம் என்று கூறும் அருண், தனது இலக்கில் நிச்சயம் வெல்வேன் என உறுதிபட கூறுகிறார்.
Next Story