அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி - நடவடிக்கை எடுக்க கோரி மனு
திருவண்ணாமலை மாவட்டத்தில், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 5 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 5 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. பவுல் ஆரோக்கியராஜ் என்பவரிடம், அவரது மனைவிக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 4 தவணைகளில், ஜோதி மற்றும் திருப்பதி ஆகியோர் 5 லட்சம் ரூபாயை பெற்றுள்ளனர். ஆனால் வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் இருந்துள்ளனர். விசாரித்த போது, இதேபோல் பலரையும் அவர்கள் ஏமாற்றியது தெரிய வந்தது. இதையடுத்து பவுல் ஆரோக்கியராஜ், பணத்தை மீட்டு, ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
Next Story