தஞ்சை பெரிய கோவில் அறங்காவலர் மீதான முறைகேடு வழக்கு தள்ளுபடி
தஞ்சாவூர் பெரிய கோயிலை நிர்வகிக்கும் அரண்மனை சமஸ்தான பரம்பரை அறங்காவலர் மீதான முறைகேடு புகார் குறித்து, விசாரணைக்கு உத்தரவிட கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
கடந்த 1985ஆம் ஆண்டு தஞ்சை பெரிய கோயிலை நிர்வகிக்க, அரண்மனை சமஸ்தான பரம்பரை அறங்காவலராக, மராத்திய மன்னர் வாரிசான பாபாஜி ராஜா போன்ஸ்லே என்பவரை இந்து சமய அறநிலையத்துறை நியமித்தது.
* இந்த நியமனத்தை ரத்து செய்ய கோரியும், பாபாஜி மீதான முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்த கோரியும், எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த சுவாமிநாதன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
* விசாரணையின் போது, பாபாஜி ராஜா போன்ஸ்லே அறங்காவலராக இருந்த போது, ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதா தேவி சிலைகள் காணாமல் போனதாகவும், பாரம்பரியத்தை காக்க அவர் தவறிவிட்டதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
* வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், சிலைகள் காணாமல் போனது குறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், அறங்காவலர் முறைகேட்டில் ஈடுபட்டிருந்தால், இந்து சமய அறநிலையத்துறை விசாரணை நடத்தும் என நம்புவதாக தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Next Story