சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை - தமிழக பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் வலியுறுத்தல்
சி.ஏ..ஏ. சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை வன்முறையாளராக முதலமைச்சர் சித்தரிப்பதாக தமிழக பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சி.ஏ..ஏ. சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை வன்முறையாளராக முதலமைச்சர் சித்தரிப்பதாக தமிழக பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பழ நெடுமாறன், வேல்முருகன், தெகலான் பாகவி, சட்டமன்ற உறுப்பினர் தனியரசு மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பினர், என்பிஆர் கணக்கெடுப்பு, சி.ஏ.ஏ. சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story