சாத்தூரில் பிடிபட்ட அரியவகை முள்எலி - செண்பகத்தோப்பு வனப்பகுதியில் விடப்பட்டது
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தமிழ்நாடு ஓட்டலின் அருகே சுற்றித்திரிந்த அரியவகை முள் எலி ஒன்று, ஓட்டல் ஊழியர்களிடம் பிடிபட்டது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தமிழ்நாடு ஓட்டலின் அருகே சுற்றித்திரிந்த அரியவகை முள் எலி ஒன்று, ஓட்டல் ஊழியர்களிடம் பிடிபட்டது. சுமார் 500 கிராம் எடை கொண்ட அந்த முள் எலியை, பத்திரப்படுத்திய ஊழியர்கள், இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து, முள் எலியை பெற்றுக்கொண்ட வனத்துறையினர், அதனை ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பத்தோப்பு வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
Next Story