நெல் மூட்டைகளை எடை போட கட்டணம் வசூல் - வேளாண் ஊழியர்களை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகளை எடைபோட கட்டணம் வசூலிப்பதை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல் மூட்டைகளை எடை போட கட்டணம் வசூல் - வேளாண் ஊழியர்களை கண்டித்து விவசாயிகள்  சாலை மறியல்
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நெல் மூட்டைகளை எடைபோட கட்டணம் வசூலிப்பதை கண்டித்து, விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னதாக, ஆரணி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்களுக்கு, இலவசமாக நெல் மூட்டைகள் எடை போட்டு வழங்கி வந்த நிலையில், தற்போது மூட்டைக்கு 8 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய விவசாயிகள், சம்பந்தபட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை வேண்டுமென வலியுறுத்தினர். பின்னர், போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்