மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்கான அட்சய பாத்திரம் எனும் 2 நவீன சமையலறைகளுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டியுள்ளார்.
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
x
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்காக அட்சய பாத்திர அமைப்பின் சமையல்கூடம் பூமி பூஜை விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி .வேலுமணி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சத்துணவுத் திட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றார். தமிழகத்தில் மொத்தம் 43 ஆயிரத்து 233 சமையல் கூடங்களில், தயாராகும் சத்துணவினால், 5 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். 



Next Story

மேலும் செய்திகள்