"சாராயம் காய்ச்சுவதை நிறுத்தினால் கடன் உதவி" : காவல்துறை முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு
கள்ளச்சாராயம் காய்ச்சுவதை நிறுத்தினால் சுயதொழில் செய்ய கடன் உதவி பெற்றுத் தருவதாக விழிப்புணர்வு கூட்டம் நடத்திய காவல்துறையினர், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
கள்ளச்சாராயம் காய்ச்சுவதை நிறுத்தினால் சுயதொழில் செய்ய கடன் உதவி பெற்றுத் தருவதாக விழிப்புணர்வு கூட்டம் நடத்திய காவல்துறையினர், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் காவல்துறையினர், தோக்கவாடி பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர். அதில், கள்ளச்சாராயம் காய்ச்சுவதை 3 நாட்களுக்குள் நிறுத்தி விட்டால் சுய தொழில் செய்ய கடன் பெற்று தருவதாக கூறிய காவல் துறையினர், தொடரும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த மூதாட்டி ஒருவர் மதுவினால் ஏற்படும் தீமைகளை பாட்டாக பாடியது கவனத்தை ஈர்த்தது.
Next Story