கண்ணாமூச்சி விளையாட்டில் காணாமல் போன சிறுவன் : கழிவு நீர்த் தொட்டியில் சடலமாக சிறுவன் மீட்பு

சென்னை ஆவடியில் கண்ணாம்பூச்சி விளையாட்டில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.
கண்ணாமூச்சி விளையாட்டில் காணாமல் போன சிறுவன் : கழிவு நீர்த் தொட்டியில் சடலமாக சிறுவன் மீட்பு
x
சென்னை  ஆவடியில் கண்ணாம்பூச்சி விளையாட்டில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். அன்பழகன் தெருவில் வசித்து வரும் காந்தி என்பவரின் மகன் 6 வயதான சுமுகன், தனது அக்கா தம்பியுடன்  கண்ணாம்பூச்சி விளையாடி உள்ளான். ஒளிந்து கொள்ள சென்ற சுமுகன் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. பெற்றோர்கள் பல மணி நேரம் தேடியும் கிடைக்காதால், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி கேமிாரைவை ஆய்வு செய்தனர். அப்போது சிறுவன் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்தினர். பின்னர் அருகே உள்ள கழிவு நீர் தொட்டியை திறந்து பார்த்த போது, அங்கு சிறுவன் சுமுகன் சடலமாக கிடந்தது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்