காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா ஏற்றுமதி - ரோஜா, கார்னேசன் மலர்கள் ஏற்றுமதி
நீலகிரி மாவட்டத்தில் இருந்து, காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா மற்றும் கார்னேசன் மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் இருந்து, காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா மற்றும் கார்னேசன் மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. நீலகிரியில், தேயிலை, காய்கறி பயிர்களுக்கு அடுத்தபடியாக பசுமை குடில் அமைத்து, ரோஜா பூக்கள் மற்றும் கார்னேசன் மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு, இங்கிருந்து, தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களுக்கு பூக்கள் ஏற்று செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பூக்களின் விலை சரிந்துள்ளதால், ரோஜா 15 ரூபாய்க்கும், கார்னேசன் மலர்கள் 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Next Story