போலி ஆவணம் கொடுத்து பணியில் சேர்ந்த ஒடிசா இளைஞர் : பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைப்பு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் போலி ஆவணம் சமர்ப்பித்து , ஒப்பந்த அடிப்படையில் கடந்த 6 மாதங்களாக வேலை செய்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 24 வயதான சக்கர தார் பிரதான் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
போலி ஆவணம் கொடுத்து பணியில் சேர்ந்த ஒடிசா இளைஞர் : பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைப்பு
x
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் போலி ஆவணம் சமர்ப்பித்து , ஒப்பந்த அடிப்படையில் கடந்த 6 மாதங்களாக வேலை செய்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த  24 வயதான சக்கர தார் பிரதான் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையம் வளாகம் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர காண்காணிப்பு மற்றும் பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டு உள்ள நிலையில், ஒடிசா மாநிலம் பட்டாபூர் காவல் நிலையத்தில்  இருந்து பெறப்பட்டதாக போலி தடையில்லா சான்று அளித்து சக்கர தார் பீர்தான் பணியில் சேர்ந்தது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கூடங்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட அந்த இளைஞர் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்