தேனி ஆவின் குழு நியமன ரத்தை எதிர்த்த சீராய்வு மனு தள்ளுபடி - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தேனி ஆவின் சங்க இடைக்கால குழுவின் நியமனம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த சீராய்வு மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.
தேனி ஆவின் குழு நியமன ரத்தை எதிர்த்த சீராய்வு மனு தள்ளுபடி - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
x
தேனி ஆவின் சங்க இடைக்கால குழுவின் நியமனம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த சீராய்வு மனு, தள்ளுபடி செய்யப்பட்டது. ஓ.ராஜா மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து, கடந்த மாதம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, பழனிச்செட்டிபட்டியை சேர்ந்த அமாவாசை என்பவர் உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். அதில் விதிகளின்படி ஓ.ராஜா உள்ளிட்டோர் பதவி ஏற்கவில்லை என கூறி இருந்தார். எனவே இந்த தீர்ப்பை சீராய்வு  செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 


Next Story

மேலும் செய்திகள்