தென்காசி : சாலை தொடக்க விழாவில் வாக்குவாதம் - பரபரப்பு
தென்காசி மாவட்டம் ஆழ்வார்க்குறிச்சியில் திமுக எம்.எல்.ஏ, அதிமுக மாவட்ட செயலாளர் தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்க்குறிச்சியில் திமுக எம்.எல்.ஏ, அதிமுக மாவட்ட செயலாளர் தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 கோடிரூபாய் மதிப்பில் தார்சாலை பணிகள் நிறைவு பெற்று தொடக்க விழா நடந்தது. இந்த விழாவிற்கு வருகை தந்த ஆலங்குளம் எம்.எல்.ஏ, பூங்கோதை, தனக்கு அழைப்பு கொடுக்கவில்லை என வாக்குவாதத்தில்ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின் முன்னாள் எம்பியும் அதிமுக மாவட்ட செயலாளருமான பிரபாகரன் அவரை சமாதானம் செய்து அழைத்து சென்றார்.
Next Story