நாளை தைப்பூச திருவிழா- திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்தவரை, காவலர் தாக்கியதையடுத்து போலீசா ர்-பக்தர்கள் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தைப்பூச திருவிழா நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பச்சை வேட்டி அணிந்தும், காவடி எடுத்தும் திருச்செந்தூருக்கு சாரை, சாரையாக வரத்தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், பாதயாத்திரையாக வரும் ஏராளமான பக்தர்கள் திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் கற்பூரம் ஏற்றி வழிபட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கற்பூரம் ஏற்றிய பக்தரை காவலர் ஒருவர் தாக்கியதையடுத்து, போலீசாருக்கும் பக்தர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்படது. தொடர்ந்து போலீசாரை கண்டித்து பக்தர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் 1 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story