கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி ஊழியர்களுடன் லாரி ஓட்டுநர் தகராறு

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில், ஊழியர்களை தாக்கி விட்டு, லாரியுடன் தப்பி ஓடிய ஓட்டுநரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி ஊழியர்களுடன் லாரி ஓட்டுநர் தகராறு
x
ஓசூரிலிருந்து வந்த லாரி ஒன்று, கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் பாஸ்டேக் வழியில் நின்றுள்ளது. அங்குள்ள ஊழியர்கள் லாரி ஓட்டுநரிடம் கட்டணம் கேட்கவே, கட்டணம் கட்ட முடியாது என லாரி ஓட்டுநர் தெரிவித்ததோடு,  தான் ஒரு சிவ பக்தன் என்றும், தன்னை யாரும் பிடிக்க முடியாது என்றும் கூறி ஊழியர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. 
இதையடுத்து ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, லாரி ஓட்டுநர், லாரியை மின்னல் வேகத்தில் இயக்கி அங்கிருந்து தப்பி விட்டார். இதையடுத்து, பதிவெண்ணை வைத்து போலீசார் ஆய்வு செய்தபோது, அந்த லாரி விழுப்புரத்தை சேர்ந்தது எனவும், அதன் உரிமையாளர் சுந்தர் ராஜ் என்பதையும் கண்டுபிடித்தனர். இதன் அடிப்படையில், லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்