ரூ.148 கோடி சொத்துக்கள் முடக்கியதை எதிர்த்த வழக்கு : வருமான வரித்துறை பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சசிகலாவின் பினாமி பரிவர்த்தனை எனக் கூறி 148 கோடி ரூபாய் முடக்கப்பட்டதை, எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வருமான வரித் துறை பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லட்சுமி ஜூவல்லரி என்ற பெயரில் நகைக் கடை நடத்தி வந்த நவீன் பாலாஜி, தனது ரிசார்ட் ஒன்றை, 2016ம் ஆண்டு விற்பனை செய்தபோது, சசிகலாவின் பிரதிநிதிகள் என கூறிக் கொண்டு அவரை அணுகிய சிலர், 168 கோடி ரூபாய்க்கு விலை பேசியதோடு, 148 கோடி ரூபாய் அளவுக்கு பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்தததாக கூறப்படுகிறது. பின், இந்த பரிவர்த்தனை திடீரென ரத்து செய்யப்பட்ட நிலையில், நவீன் பாலாஜி வீட்டில் சோதனையிட்ட வருமான வரித்துறையினர், 148 கோடி ரூபாய் பணத்தை கைப்பற்றி அதனை, சசிகலாவின் பினாமி பரிவர்த்தனை எனக் கூறி, முடக்கி வைத்தனர். இதை ரத்து செய்யக் கோரி நவீன் பாலாஜி உள்பட ஐந்து பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். தற்போது இந்த மனு விசாரணைக்க வந்தபோது, பிப்ரவரி 19ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு வருமான வரித் துறை துணை ஆணையருக்கு நீதிபதி
அனிதா சுமந்த் உத்தரவிட்டார்.
Next Story