"டி.என்.பி.எஸ்.சி முறைகேடு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்" - திமுக பொருளாளர் துரைமுருகன் வலியுறுத்தல்

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு விசாரணையை உடனடியாக சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, திமுக பொருளாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி முறைகேடு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் - திமுக பொருளாளர் துரைமுருகன் வலியுறுத்தல்
x
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜெயக்குமார் சரண்டரில் மறைந்துள்ள மர்மங்களையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார். டி.என்.பி.எஸ்.சி.யின் இந்த தேர்வு முறைகேட்டை அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் சி.பி.சி.ஐ.டி. விசாரிப்பதில் எந்த பயனும் இருக்காது என்றும் துரைமுருகன் கூறியுள்ளார். நேர்மையாக - இரவு பகலாக படித்து தேர்வு எழுதி - ஏமாற்றம் அடைந்துள்ள லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், இந்த வழக்கை  சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்