வடசென்னையில் கொரோனா வைரஸ் அறிகுறி?
சென்னையில், 2 பெண்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி தெரியவந்ததை அடுத்து, அரசு ஸ்டான்லி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில், 2 பெண்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி தெரியவந்ததை அடுத்து, அரசு ஸ்டான்லி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலில், சீனாவில் இதுவரை 500 க்கும் அதிமானோர் உயிரிழந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளிடம் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சீனாவில் இருந்து சென்னை வந்த 2 பெண்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆர்கே நகரைச் சேர்ந்த 2 பெண்களும் சீனாவில் மருத்துவம் படித்து வரும் நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பி வந்தனர். தற்போது இருவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டதால், கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்குமோ என்கிற கோணத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Next Story