தீயணைப்பு துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு? - 2 ஐபிஎஸ் அதிகாரிகளை விடுவித்தது உயர்நீதிமன்றம்
தீயணைப்பு துறைக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ததில், 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து, இரு ஐபிஎஸ் அதிகாரிகளை சென்னை உயர்நீதிமன்றம் விடுவித்தது.
1989 மற்றும் 1992ஆம் ஆண்டுகளில், தீயணைப்பு துறைக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில், அரசுக்கு 2 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக, அப்போது தீயணைப்புத் துறை இயக்குனர்களாக இருந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஹரிஹரனே, வீரராகவன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து 2003ம் ஆண்டு தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து இருவரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள், கடந்த 17 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தன. இந்நிலையில் இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி தண்டபாணி, இந்த குற்றச்சாட்டு கற்பனையானது என்பதை அரசுத்தரப்பு சாட்சிகளே நிரூபித்துள்ளனர் எனக் கூறி, இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
Next Story