கர்ப்பிணி மகள் மீது ஆசிட் வீசிய தந்தை - கொடூர தந்தையை கைது செய்த காவல்துறை

திருவள்ளூர் அருகே பெற்றோர் எதிர்ப்பு மீறி காதல் திருமணம் செய்து கொண்ட கர்ப்பிணி மகள் மீது ஆசிட் வீசிய கொடூர தந்தை கைது செய்யப்பட்டார்.
கர்ப்பிணி மகள் மீது ஆசிட் வீசிய தந்தை - கொடூர தந்தையை கைது செய்த காவல்துறை
x
திருத்தணியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை காவலர் பாலகுமாரின் மகள் தீபிகா, பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார். திடீரென மகளை பார்க்க வேப்பம்பட்டு சென்ற பாலகுமார், தாய்க்கு உடல்நிலை சரியில்லை என அவரை வீட்டிற்கு அழைத்துள்ளார். இதற்கு தீபிகா மறுக்கவே கையில் வைத்திருந்த பவுடர் கலந்த அமிலத்தை கர்ப்பிணி மகளின் முகத்தில் வீசி மிகவும் கொடூரமாக தந்தை செயல்பட்டுள்ளார். இது குறித்து தீபிகாவின் கணவர் சாய்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் பாலகுமாரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், வேப்பம்பட்டு பகுதியில் நடந்த வாகன தணிக்கையின் போது பாலகுமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 


Next Story

மேலும் செய்திகள்