பள்ளிக்கு சென்ற மாணவர்கள் போராட்டத்திற்காக கடத்தப்பட்டதாக தகவல் - நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது போலீசில் புகார்

பள்ளிக்கு சென்ற மாணவர்கள், போராட்டத்திற்காக, கடத்தப்பட்டதாக தகவல் பரவியதால் மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பள்ளிக்கு சென்ற மாணவர்கள் போராட்டத்திற்காக கடத்தப்பட்டதாக தகவல் - நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது போலீசில் புகார்
x
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில், நாம் தமிழர் கட்சி சார்பில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பள்ளி மாணவர்களை போலீசார்  அனுமதிக்காத நிலையில், திடீரென பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில்,  நாகர்கோவில் அருகே தாழக்குடி அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் சிலர், கடத்தப்பட்டதாக, தகவல் பரவியதால், மாணவர்களின் பெற்றோர் பள்ளியில்  குவிந்தனர். 

இதையடுத்து, பள்ளி அருகே உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைப் பார்த்த பள்ளி தலைமை ஆசிரியர், வாகனம் ஒன்றில் மாணவர்களை நாம் தமிழர் கட்சி நிர்வாகி ராகுல், அழைத்து சென்றது தெரிய வந்தது.  

இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ராகுலை விசாரணைக்காக அழைத்து சென்ற போலீசார்,  மாணவர்களை அவர்களின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்