டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு வழக்கு - டிஎன்பிஎஸ்சி தலைவர் பதிலளிக்க உத்தரவு

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகளில், தமிழ் வழியில் தேர்வானவர்களுக்கு பிரதான தேர்வுகளில் முன்னுரிமை வழங்க கோரிய வழக்கில், டிஎன்பிஎஸ்சி தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு வழக்கு - டிஎன்பிஎஸ்சி தலைவர் பதிலளிக்க உத்தரவு
x
திருமங்கலத்தை சேர்ந்த சக்திராவ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ் வழியில் பயின்று, முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தனக்கு, பிரதான தேர்வில் பங்கேற்க அழைப்பு வரவில்லை என கூறியிருந்தார். எனவே, குரூப்-1  தேர்வில், தமிழ் வழியில் முழு நேர வகுப்பில் தேர்வானவர்களுக்கு, பிரதான தேர்வுகளில் முன்னுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், டிஎன்பிஎஸ்சி தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்