தனுஷ்கோடி கடற்கரையில் முட்டையிட்டு செல்லும் ஆமைகள் - 454 ஆமை முட்டைகளை மீட்ட வனத்துறையினர்

தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் ஆமை முட்டைகளை வனத்துறையினர் மீட்டு, அதனை பொரிப்பகத்தில் பத்திரப்பத்தினர்.
தனுஷ்கோடி கடற்கரையில் முட்டையிட்டு செல்லும் ஆமைகள் - 454 ஆமை முட்டைகளை மீட்ட வனத்துறையினர்
x
ராமேஸ்வரம் அடுத்த மன்னார் வளைகுடா கடலில் உள்ள ஆமைகள், ஆண்டுதோறும் டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலத்தில், தனுஷ்கோடி பகுதிக்கு வந்து முட்டையிட்டு செல்வது வழக்கம். தட்ப வெப்பநிலை மாற்றத்தால், நடப்பு ஆண்டு இது பிப்ரவரி மாதத்தில் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனுஷ்கோடி பகுதியில் அதிகாலையில் ரோந்து சென்ற வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள், ஆமைகளின் 454 முட்டைகளை மீட்டு, முந்திராயர் சத்திரத்தில் உள்ள பொரிப்பகத்தில் பத்திரப்படுத்தினர். 40 நாட்களுக்கு பின் முட்டைகளிலிருந்து வெளிவரும் ஆமை குஞ்சுகள், பின்னர் கடலில் விடப்படும். கடந்த ஆண்டு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முட்டைகள் மீட்கப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டு நாள்தோறும் அதிகாலை வேளைகளில் ரோந்து நடைபெறும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்