"மத்திய பட்ஜெட் சிறப்பாக உள்ளது" - துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம்

இளைஞர்கள், விவசாயிகள் பயன்பெறக் கூடிய வகையில் மத்திய அரசின் பட்ஜெட் உள்ளதாக துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட் சிறப்பாக உள்ளது -  துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம்
x
இளைஞர்கள், விவசாயிகள் பயன்பெறக் கூடிய வகையில் மத்திய அரசின் பட்ஜெட் உள்ளதாக துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய வரித் தொகுப்பில் இருந்து மாநில அரசுக்கு அளிக்கும் நிதி குறைக்கப்பட்டாலும், தமிழகத்திற்கான நிதி, கூடுதலாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் திட்டம், சூரிய ஒளி மோட்டார் பம்ப் திட்டம் ஆகியவை வரவேற்கத்தக்கது என்றும், ஆத்திச்சூடி, திருக்குறளை முன்னிலைப்படுத்தியது கூடுதல் சிறப்பு என்றும் அவர் பாராட்டியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்