குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு விவகாரம் - 2ஆம் நாள் விசாரணையில் மேலும் இருவர் கைது
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு விவகாரத்தில் மேலும் 2 அரசு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டனர்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு விவகாரத்தில் மேலும் 2 அரசு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டனர். காவலர் சித்தாண்டியின் சகோதரர் வேல்முருகன் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜெயராணி ஆகியோரிடம் தொடர்ந்து, 2ஆம் நாளாக விசாரணை நடைபெற்றது. அப்போது, திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வரும் சென்னை கொரட்டூரை சேர்ந்த சுதாராணி மற்றும், தலைமை செயலக உள்துறையில் அதிகாரியாக பணிபுரியும், பெரம்பூரை சேர்ந்த விக்னேஷ் ஆகிய இருவரும், முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்த்து. இதனை அடுத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
Next Story