மழை வேண்டி நடைபெற்ற மீன்பிடி திருவிழா - ஆர்வமுடன் கண்மாயில் மீன்பிடித்த கிராம மக்கள்
மதுரை மாவட்டம் சொக்கம்பட்டியில் மழை வேண்டி பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் சொக்கம்பட்டியில் மழை வேண்டி பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி, சொக்கம்பட்டி பாசறை கண்மாய்-க்கு, அதிகாலையிலேயே சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளை வீசியதை தொடர்ந்து கச்சா, வலை உள்ளிட்ட கருவிகளுடன் கண்மாயில் இறங்கிய பொதுமக்கள், கட்லா, சிலேப்பி, கெண்டை உள்ளிட்ட மீன்களை பிடித்து உற்சாகமடைந்தனர். பிடித்த மீன்களை, தங்களது வீடுகளில் சமைத்து இறைவனுக்கு படைத்த பின்னர், பொதுமக்கள் உண்ணுவது வழக்கம். இதனால் நல்லமழை பொழியும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
Next Story