"ஊரை விட்டு விலக்கி வைத்ததை எதிர்த்து வழக்கு : தமிழக அரசு, ஆட்சியர் பதிலளிக்க கோரி உத்தரவு"

13 மீனவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு
ஊரை விட்டு விலக்கி வைத்ததை எதிர்த்து வழக்கு : தமிழக அரசு, ஆட்சியர் பதிலளிக்க கோரி உத்தரவு
x
நாகை மாவட்டத்தில் மீனவ கிராமத்தை சேர்ந்த 13 பேரை, ஊரை விட்டு விலக்கி வைத்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு  தொடரப்பட்டிருந்தது. மீன் விற்பனை செய்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக 
நம்பியார் நகர் மற்றும் அக்கரைபேட்டை  ஆகிய மீனவ கிராமத்தை சேர்ந்த கட்டப்பஞ்சாயத்துகாரர்கள் 13 பேரை மீனவ கிராமத்தை விட்டு விலக்கி வைத்ததாக கூறப்படுகிறது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு  தமிழக அரசு மற்றும் நாகை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் 4 வாரத்திற்குள் பதிலளிக்க  உத்தரவிட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்