காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னையில் போராட்டங்கள் நடத்த தடை விதித்து பிறப்பித்த உத்தரவை பொதுமக்களுக்கு தெரிவிக்காதது ஏன் என, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
x
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் ஜனவரி 13 முதல் 28 வரை அனுமதியின்றி ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், உள்ளிட்டவை நடத்த தடை விதித்து சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

* போராட்டங்களுக்கு அனுமதி கோரி 5 நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.  

* இந்த உத்தரவை எதிர்த்தும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக  பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்தும் காயத்ரி  என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  காவல் ஆணையரின் உத்தரவு மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்படிருப்பதாகவும், இது குறித்து பொது மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் மனுவில் தெரிவித்திருந்தார். 

* இந்த மனு விசாரணைக்கு வந்த போது,  சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்காக தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும், சென்னையில் 
உள்ள காவல் நிலையங்களில் இந்த உத்தரவு அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்பட்டிருப்பதாகவும் காவல் ஆணையர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். 

* இதனை ஏற்க மறுத்த நீதிபதி, சென்னை மாநகரம் முழுவதும் பொருந்தும் இந்த உத்தரவை மக்களுக்கு ஏன் தெரியப்படுத்தவில்லை என கேள்வி எழுப்பினார்.

* கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு மக்கள் ஒன்று கூட காவல் துறை அனுமதி வேண்டுமா, அனுமதி பெறவில்லை என்றால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

* காவல் ஆணையர் அலுவலக உத்தரவுகளை இணையதளத்தில் ஏன் வெளியிடவில்லை எனவும் நீதிபதி கேட்டதையடுத்து,   இந்த உத்தரவை மக்களிடம் தெரிவிப்பது குறித்து பதிலளிக்க காவல் ஆணையர் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணை பிப்ரவரி 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்