"கொரோனா தடுப்பு - மத்திய அரசு அதிரடி நடவடிக்கை"
டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் கேபினட் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கொரோனா வைரஸ் தொடர்பான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த கூட்டத்தில், பல்வேறு அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகளுடன் கேபினட் செயலாளர் ஆலோசனை நடத்தியதுடன், அனைத்து மாநில தலைமை செயலாளர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை பார்ப்போம்..
* ஜனவரி 15ம் தேதிக்கு பிறகு சீனாவில் இருந்து வந்தவர்கள் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், சீனாவில் இருந்து வந்தவர்கள் அனைவரையும் 14 நாட்களுக்கு வீட்டில் தனித்து வைத்திருக்கவும், சீனாவுக்கு பயணம் செல்வதை தவிர்க்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
* மேலும் கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனை மேற்கொள்ள இன்று முதல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் டெல்லி NCDC மையம் மற்றும் பெங்களூருவில் இரண்டு இடங்களிலும், மும்பை மற்றும் கேரளாவில் தலா ஒரு இடம் என 6 ஆய்வகங்கள் செயல்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
* மேலும் 31ம் தேதி முதல், சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட், கொல்கத்தா, செகந்திராபாத், லக்னோ, ஜெய்ப்பூர், நாக்பூர் ஆகிய 6 இடங்களில் ஆய்வகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* மேலும் சுற்றுலா தளங்களில் செக் போஸ்ட் அமைத்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், கட்டுப்பாட்டு அறைகள் திறக்கவும், அதன் எண்களை பிரபலப்படுத்தவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* மேலும், மாநில அரசுகள், அந்தந்த மாநில மொழிகளில், கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story