"டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கு : இடைத்தரகர் ஜெயக்குமார் பற்றிய தகவல் அளிப்போருக்கு சன்மானம்"
"முக்கிய குற்றவாளி இடைத்தரகர் ஜெயக்குமார் வீட்டில் சோதனை"
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டு வழக்கின் முக்கிய குற்றவாளியான, இடைத்தரகர் ஜெயக்குமார் பற்றிய தகவல் அளிப்போருக்கு, தக்க சன்மானம் அளிக்கப்படும் சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர். இது குறித்து சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை முகப்பேரில் உள்ள இடைத்தரகர் ஜெயக்குமாரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக கூறியுள்ளது. அதில், மடிக்கணினி, பென்டிரைவ் உள்பட பல ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதோடு, ஜெயக்குமாரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள சிபிசிஐடி போலீசார், அவர் குறித்து தகவல் அளிப்போருக்கு, தக்க சன்மானம் அளிக்கப்படும் என கூறியுள்ளனர். தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்களையும் கொடுத்துள்ளனர். ஜெயக்குமார் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முடியாதபடி அனைத்து விமான நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளதாகவும், சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
99402 69998, 94438 84395, 99401 90030, 94981 05810,94441 56386 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் - சிபிசிஐடி
Next Story