மக்காச்சோளத்தால் உருவான பைகள் - வேலூர் மாநகராட்சியில் புதிய முயற்சி
வேலூரில் நூறுசதவீதம் மக்கக் கூடிய வகையில் மக்காச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பைகள் வேலூரில் விற்பனைக்கு வந்துள்ளன.
மக்காச்சோளத்தில் இருந்து பைகள் என்றால் நம்ப முடிகிறதா.அதுவும் 5 கிலோ எடை வரை தாங்கும் சக்தி இயற்கையாகவே 6 மாத காலத்தில் முற்றிலும் மக்கும் தன்மை சுற்றுச்சூழலை சிறிதும் பாதிக்காது போன்றவை அந்த பையின் கூடுதல் சிறப்பம்சங்கள்.பைகள் மக்கும் தன்மையை பரிசோதித்தும் காண்பித்தார் மகளிர் சுய உதவிக்குழு ஊழியரும் விற்பனையாளருமான சத்யா.
ஆம், அதனை செய்து காட்டி, மக்களிடம் சிறப்பான வரவேற்பையும் பெற்றுள்ளது வேலூர் மாநகராட்சி.வேலூர் அண்ணாசாலையில் உள்ள ஏலகிரி அரங்க வளாகத்தில் மக்காச்சோளத்தால் ஆன கவர் மற்றும் பைகள் விற்பனை மையம் திறக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் உருவான இந்த விற்பனை மையம், மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இயற்கையை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மக்காச் சோள பைகளை மக்கள் அனைவரும் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்பது மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்தின் வேண்டுகோளாக உள்ளது...
Next Story