மங்களூர் பஞ்சாயத்து யூனியன் தலைவர் பதவிக்கான மறு தேர்தலுக்கு தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்

கடலூர் மாவட்டம், மங்களூர் பஞ்சாயத்து யூனியன் தலைவர் பதவிக்கான மறு தேர்தலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மங்களூர் பஞ்சாயத்து யூனியன் தலைவர் பதவிக்கான மறு தேர்தலுக்கு தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்
x
மங்களூர் பஞ்சாயத்து யூனியன் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் திமுக வேட்பாளர் சுகுனா மற்றும் அதிமுக வேட்பாளர் மலர்விழி ஆகியோர் தலா 12 வாக்குகள் பெற்றதால், தேர்தல் சமனில் முடிந்தது. குலுக்கல் முறையில் தலைவரை தேர்ந்தெடுக்க வாக்காளர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், தேர்தல் 30ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், மறு தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து திமுக வேட்பாளர் சுகுனா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 
காவல் துறை உதவியை கொண்டு தேர்தலை நடத்தி முடிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியதோடு, இது குறித்து மாநில தேர்தல் ஆணையம், அதிமுக வேட்பாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மறு தேர்தல் நடத்த தடை விதித்து, பிப்ரவரி 6 ஆம் தேதிக்கு, விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.



Next Story

மேலும் செய்திகள்