"நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொசு ஒழிப்பு - மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு"
மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, கொசுக்களை ஒழிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது இது குறித்து மத்திய மாநில அரசு பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Next Story