செல்போன் மூலம் ஆலோசனை பெற்று பிரசவம் பார்த்த செவிலியர்கள் - மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு

செல்போன் மூலம் ஆலோசனை பெற்று செவிலியர்கள் பிரசவம் பார்த்தது குறித்த தினத்தந்தி நாளிதழ் செய்தி எதிரொலியாக, 4 வாரத்தில் விரிவான அறிக்கை அளிக்குமாறு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
செல்போன் மூலம் ஆலோசனை பெற்று பிரசவம் பார்த்த செவிலியர்கள் - மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு
x
இம்ரான் என்பவரது மனைவி பரீதாவுக்கு ஜனவரி 21ஆம் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், சிலமணி நேரத்தில் தாய் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இதேபோல், ரேவதி என்ற ஆசிரியைக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த நிலையில், ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்தச் செய்திகளின் அடிப்படையில், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள மாநில மனித உரிமை ஆணையம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் 4 வாரத்தில் தனித் தனியாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்