குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 12 கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் மோசடியாக தேர்வு எழுதி தமிழக அளவில் 288 மதிப்பெண் பெற்று எட்டாவது இடத்தில் தேர்ச்சி பெற்ற கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்த்த சிவராஜ் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைதுசெய்தனர்.
தலைமறைவாக இருந்தவரை செல்போன் சிக்னல் மூலம் பண்ருட்டி பேருந்து நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து சென்றனர். கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே ராஜசேகர், சீனுவாசன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மூன்றாவதாக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Next Story