எஸ்.ஐ. வில்சன் சுட்டு கொல்லப்பட்ட வழக்கு - கைதான 2 பேருக்கும் மருத்துவ பரிசோதனை
எஸ்.ஐ வில்சன் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில், கைதான 2 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
களியக்காவிளை சோதனை சாவடி சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில், அப்துல் சமீம், தவுபீக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை 10 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே குற்றவாளிகள் கொடுத்த தகவலின் பேரில், எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகே துப்பாக்கி மீட்கப்பட்டது. தொடர்ந்து, திருவனந்தபுரம் பேருந்து நிலையம் அருகே கொலைக்கு பயன்படுத்திய கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
குற்றவாளிகளுக்கான தொடர்புகள் குறித்து விரிவான விசாரணை நடத்த போதிய கால அவகாசம் தேவைப்படுவதால், போலீஸ் காவலை நீட்டிக்க கோரி, நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கைதான இருவருக்கும், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள், நேசமணி நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
Next Story