திருவண்ணாமலை : தேசிய கொடி ஏற்றுவதில் அதிமுக-திமுக மோதல்
ஆரணி அருகே அரசு பள்ளியில் தேசியக் கொடியேற்றுவது தொடர்பாக திமுக அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது.
ஆரணி அருகே அரசு பள்ளியில் தேசியக் கொடியேற்றுவது தொடர்பாக திமுக அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் அரசு மேல்நிலைள்ளியில் குடியரசு தினவிழா நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக திமுக ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா தரணி பங்கேற்றார். அப்போது பெற்றோர் ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்த அதிமுகவை நிர்வாகி மணி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், போலீசார் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் பள்ளி தலைமையாசிரியை தேசிய கொடி ஏற்றினார். இதனால் பள்ளி மாணவ மாணவிகள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
Next Story