காவலர் தேர்வில் முறைகேடு என பரவிய செய்தியால் பரபரப்பு - மறுப்பு தெரிவித்த தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு ஒரு பக்கம் பரபரப்பை கிளப்பியிருக்கும் நிலையில் காவலர் தேர்விலும் முறைகேடு நடந்ததாக வெளியான தகவலுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
காவலர் தேர்வில் முறைகேடு என பரவிய செய்தியால் பரபரப்பு - மறுப்பு தெரிவித்த தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்
x
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு நடத்தியது. 8826 பணியிடங்களுக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இதில் எழுத்துத்தேர்வில் 47 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குரூப் 4 தேர்வு விவகாரம் போலவே வேலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் தேர்வானதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த செய்தியை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மறுத்துள்ளது. அதேபோல் உதவி ஆய்வாளர் தேர்வில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மையங்களில் விசாரணை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்