மூன்று பேரை அரிவாளால் வெட்டிய வியாபாரி - சிசிடிவியில் பதிவான பரபரப்பு காட்சிகள்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், கூட்டுறவுத்துறை அதிகாரி உள்பட 3 பேரை கரும்பு வியாபாரி அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆண்டிப்பட்டி கூட்டுறவு பண்டகசாலையின் பாதையை மறைத்து, மறவபட்டியை சேர்ந்த நாகராஜ், கரும்பு கடை வைத்திருந்தார். கூட்டுறவு பண்டகசாலை மேலாளர் கோட்டைச்சாமி மற்றும் பணியாளர்கள் பெரியசாமி, முருகேசன் ஆகியோர் இதை தட்டிகேட்டுள்ளனர். இதன் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரம் அடைந்த கரும்பு வியாபாரி நாகராஜ், அரிவாளால் மூன்று பேரை தாக்கியுள்ளார்.
Next Story