குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.
குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரிய மசூதி அருகே தொடங்கிய இந்த பேரணியானது முக்கிய வீதிகள் வழியாக வந்தது.
இதேபோல், கள்ளக்குறிச்சியிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தவர்கள் பின்னர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கையில் தேசிய கொடி ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றனர். காந்தி, நேரு, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட தலைவர்களை போல வேடமணிந்த குழந்தைகளும் பேரணியில் கலந்து கொண்டனர்.
திருப்பூரில் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய அமைப்பினர் 200 அடிக்கு மேல் நீளமுள்ள தேசியக் கொடியை ஏந்தியவாறு பேரணி சென்றனர். இதில் கலந்து கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக் கோரி கோஷங்களை எழுப்பினர்.
Next Story